Wednesday, October 18, 2017

ஹரித்வார்




உலகின் மிகப் பழைய நகரங்களில் ஒன்று ( 1700 BC)
கும்ப மேளா நடக்கும் நான்கு ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. (அலகாபாத்,நாசிக்,உஜ்ஜைனி, ஹரித்துவார்)

கங்கை பாயும் நகரம் என்றால் கங்கா ஹாரதி இல்லாமலா ?
ரிஷிகேஷிலிருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ளது.

ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்ததாக நம்பப்படும் சந்தா தேவி கோவில் ஒரு குன்றின் மீது உள்ளது.

பர்தேஷ்வர் மஹாதேவ் கோவிலில் பாதரச லிங்கம் உள்ளது.

கடைகளில் உணவு வகை வகையாகக் கிடைப்பதுடன் , மிக மலிவு கூட.
மிகப் பழமை வாய்ந்த மோதி பஜார் , பெண்களுடன் செல்லக் கூடாத இடம் . இங்கு துணி மணி, ஆபரணங்கள், அலங்கார பொருட்கள் என்று பெண்கள் கண் மண் தெரியாமல் செலவு செய்ய மிக உகந்த இடம்....!
இந்தியாவின் மிகப் பழமையான டோங்கா என்னும் குதிரை வண்டியில் இன்றும் நாம் இங்கு சவாரி செய்யலாம்.
அமைதியும் இயற்கைச் சூழலும் தேவையா பிர்லா காட்டுக்குச் செல்லுங்கள்.



















இன்னும் நிறைய படங்கள் உள்ளன.

No comments:

Post a Comment