Wednesday, October 18, 2017

குருக்ஷேத்திரம்



அரியதாம் கண்ணன் அன்று
பெரிய-பா..ரதம் பிறந்து
சிறியதோர் ரதத்தில் நின்று
அரியவோர் அறம் நவின்று
இருப்பதாம் கீதை நன்று
பயில்வதால் அதைநீ சென்று
விளங்குமாம் சோதி ஒன்று
விலகுமாம் இருள..கன்று..!
____________________________

 பாரதத்தில் போரிடும் பாண்டவர்கள் கோரிடும் 
நூலிடமும் இல்லையே என்றான்திருதன் பிள்ளையே 
பாரதனில் போரிட சேதம்நேரும் உயிர்விட
பாரதனை நிறுத்திட என்றான்தருமன் கண்ணனை 

கண்ணன்தூது சென்றனன் படியில்ஏறி நின்றனன் 
மன்னன் திருதராட்டிரன் பாசம்மறைக்கும் நேத்திரன் 
அவனின்பிள்ளை துரியனோ அறிவுதிரிந்த ஆத்திரன்
முரடன்ஒருவன் இருந்திட அறிவுஎங்கு எடுபடும் ?
இருவரங்கு இருந்தனர் அமைதிதடுத்து நின்றனர் 
இருக்கும்காது இரண்டையும் இறுகமூடிக் கொண்டனர்

ஒருவன்பிறவிக் குருடனாம் ஒருவன்அறிவின் குருடனாம்
முடிந்தவரையில் முயன்றனர் ஆன்றோர்எடுத்து இயம்பினர்
செவிடன்காதில் சங்கென ஒலிக்கமனமும் வெதும்பினர்
பிடித்தமுயலின் காலென அடித்து துரியன் பேசினன்
போர்தொடுக்கும் வெறியிலே ஒற்றைக்காலில் நின்றனன் 
கண்ணன்திரும்பி வந்தனன் சங்கினொலி செய்தனன்..!
____________________________


11)  அரவான் பலி நமக்குத் தெரியும். ஆனால் அரவானின் கடைசி ஆசை தெரியுமா.? தன்னை ஒரு பெண் மணக்க வேண்டும் என்று அரவான் விரும்பினான். நபும்சகனும் , கூடிய விரைவில் இறக்கப் போகும் நிலையில் இருப்பவனுமான ஒருவனை எந்தப் பெண் மணக்க முன் வருவாள்.? க்ருஷ்ணர் மீண்டும் மோகினி ரூபம் எடுத்து அரவானை மணக்கிறார். அரவான் மறைவுக்குப் பின் ஒரு விதவையாக அழுகிறார்.
 2)  துர்யோதனன் சாஸ்த்ர விற்பன்னனான ஸகா தேவனிடம் போருக்கு முகூர்த்தம் குறிக்க வேண்டுகிறான். நேர்மையின் வடிவான அவனும் குறித்துக் கொடுக்கிறான்.
பாண்டு தன் மரணத்திற்குப் பிறகு தன் இறந்த உடலின் மாமிசத்தைப் புசித்து எதிர்காலத்தை அறியும் திறனை அறியும்படி பாண்டவர்களுக்குச் சொல்கிறார். ஆனால் சகாதேவன் ஒருவனே பாண்டுவின் மரணத்திற்குப் பின்னால் , தன் தந்தையின் உடலின் மாம்சத்தை உண்டு , சோதிடக் கலையின் விற்பன்னத்வத்தைப் பெறுகிறான். நடக்கப் போவதை அறிந்த அவனுக்கு அதைச் சொல்ல உரிமை இல்லை. நேராக நாளை நடக்கப் போவதை உரைத்தால் மரணம் என்ற சாபம்.  

 3)  கௌரவர்கள் அனைவரும்  பேரும் போரில் மடிந்தனர் என்று நீங்கள் நினைத்தால் அது சரியல்ல.. கௌரவர்களில் ஒருவனான , தாசிக்குப் பிறந்த யுயுத்ஸு கௌரவர்கள் பக்கம் போரிடாமல் பாண்டவர் பக்கம், தர்மத்தின் பக்கம், சேர்ந்து போரிட்டான். போரில் சாகவில்லை. அவன் தான் திருத்த ராஷ்டிரனுக்கு அந்திம கிரியை செய்தான்.

 4)  விகர்ணன் ஒருவனே பாஞ்சாலி மான பங்கத்தின் போது கௌரவ சகோதரர்களில் தர்மத்திற்கு குரல் கொடுத்தவன். அவன், விபீஷணன் போல் எதிரியுடன் சேராமல்  கும்பகர்ணன் போல்  போரிட்டு உயிர் விட்டவன். ஆனால் கடைசி வரையில் தர்மத்திற்குத் துணை போனவன். போரில் பீமனுடன் பொறுத்த வரும்போது . பீமன் அவன் நல்லுள்ளத்தை அறிந்து அவனை விலகிப் போகச் சொல்கிறான். ஆனால் விகர்ணனோ போரிட்டுக் கொன்று சபத பங்கம் ஏற்படாமல் காத்துக் கொள்ள வேண்டுகிறான்.

 5)  கிருஷ்ணனே தன்னுடைய சேனையை அழிப்பதற்குக் காரணமாகி நின்றான். துரியோதனின் விருப்பப்படி தன்னுடைய நாராயணி சேனையை துரியோதனன் சார்பில் போரிடத் தந்தான். அதை அர்ஜுனன் ஒருவனே அழித்தான் அப்போது கண்ணன் தானே சாரதி.

 6)  மஹாபாரதத்திற்குள் ஒரு ராமாயணம் இருக்கிறது. அக்ஞாத வாசத்தின் போது தருமருக்கு ரிஷி மார்க்கண்டேயர் சொல்வதாக வனபர்வத்தில் (திரௌபதி ஹரண பர்வம்) உள்ளது.

 7)  துரியோதனனின் (குரூர வீரன் ) இயற்பெயர் சுயோதனன் (சிறந்த வீரன்), இது போல் துச்சாசனுக்கும் சுச்சாசனன் (கருணையுள்ள அரசன்) என்பதே இயற் பெயர்.

 8)  குருக்ஷத்திரப் போரில் பாண்டியர்களும் சோழர்களும் போரிட்டனர். அது போல் கிரேக்கர்களும், ரோமானியர்களும் போரிட்டனர். மலையத்துவஜ பாண்டியனின் யானைப் படை பாண்டவர்கள் பக்கம் போரிட்டதாகக் கதை உண்டு

 9)  கோர பாரத யுத்தம் புரிந்த வீரர்களில் கீழ்கண்ட  12 பேர்களே உயிர் பிழைத்தனர்.
·        5 பாண்டவர்கள், க்ருத வர்மன், அஸ்வத்தாமன்,யுயுத்சு,சாத்யகி,கிருபர் , கிருஷ்ணர்,விஸ்வகேது

 10)          பீமன் கிருஷ்ணன் தூதின் போது. அமைதியையே வேண்டினான். பல நஷ்டங்களும்,கொலைகளும் ஏற்படும் யுத்தம் தவிர்க்கப் படவேண்டியது என்று கூறினான். மற்ற சோதரர்கள் ஆச்சர்யத்துடன் அவனை நோக்கினார்கள்

 11)          கீதையை அர்ஜுனன் தவிர ஹநுமானும்(தேர்க் கொடியில்), சஞ்சயனும்(திவ்ய திருஷ்டி மூலமாக) லைவாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

112)          கிருஷ்ணன் கர்ணனுக்கு அவன் பிறப்பின் ரஹஸ்யத்தைச் சொல்லி , பாண்டவர்களை எதிர்த்துப் போரிட வேண்டாம் என்று சொல்கிறார். மறுத்த கர்ணன், கண்ணனை ரஹஸ்யத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறான். த்ரௌபதி வஸ்த்ராபரணத்தின் போது ,  த்ரௌபதியைத் தரக் குறைவாகப் பேசியதற்கு வருந்துகிறான். தர்மத்தில் எந்த விதத்தில் கர்ணன் தருமருக்குக் குறைவு..























இன்னும் நிறைய படங்கள் உள்ளன.






1  







No comments:

Post a Comment